சர்வ தேச மகளிர் தின விழா

சர்வ தேச மகளிர் தின விழா

சமூக நலம் மற்றம் சத்துணவுத் திட்டத்துறை  ஏற்பாடு  செய்த மாநில அளவிலான மகளிர் தினவிழா 08.03.2017 அன்று  சர் பிட்டி தியாகராய அரங்கம்,  சென்னையில்  நடைபெற்றது.  இவ்விழாவில் திருமதி. சொ.ரேவதி துணை இயக்குனர் மகளிர் நலம் பங்கேற்பாளர்களை வரவேற்றார் மாண்புமிகு சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர்.எ.சரோஜா அவர்கள்   துறை அலுவலர்களின் பணி நிலைப்பட்டியல் புத்தகம், பணிகள் குறித்த வழிக்காட்டி கையேடுகளை வெளியிட்டு விழாபேருரை ஆற்றினார். னுளுஊமூ4027 டாக்டர் க. மணிவாசன் இ.அ.ப ,அரசுதுறை முதன்மைச் செயலர், இவ்விழாவில்  தலைமையுரையாற்றினார், திருமதி .வே. அமுதவல்லி,  இ.அ.ப  இயக்குநர்  இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.னுளுஊமூ4089 மாண்புமிகு. அமைச்சர் பெருமக்கள், டாக்டர். நிலோபர் கபில்,தொழிலாளர் நலத்துறை அமைச்சர், திருமதி. வி, எம் . ராஜலட்சுமி  ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் ,அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள்  ஆகியோரும்  கலந்துக்கொண்டனர்.

 மகளிர் நலம் குறித்த தலைப்பின் கீழ் நடைப்பெற்ற போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு  பரிசுகளும் வழங்கப்பட்டது.இவ்விழாவில் டாக்டர் நர்த்தகி நடராஜன் அவர்கள் குழுவின் நாட்டியம் , வீணை காயத்திரி அவர்களின் வீணை நிகழ்ச்சி, மாணவியரின் நடனம் ஆகியவையும் நடைபெற்றது.

alt
alt
alt
alt