மாநில அளவிலான சர்வதேச முதியோர் தின விழா

மாநில அளவிலான சர்வதேச முதியோர் தின விழா

 ஐக்கிய நாடுகள் சபை நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை பின்பற்றும் பொருட்டு ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் நாள் சர்வதேச முதியோர் தின விழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது. முதியோர்களின் சேவைகளை அங்கீகரிக்கவும், அவர்களது அனுபவம் , அறிவு ஆகியவற்றை வெளிக்கொணர்தல் , சமுதாயத்தில் முதியோர்கள் என்பவர்களே """"மூத்த குடிமக்கள்"" என்பதை உணர்தல். முதியோர்களின் நலன் பேணுதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இவ்விழா கொண்டாடப்படுகிறது. 2016ஆம் ஆண்டிற்கான கருத்தானது செயல்திறனுடன் முதுமை அடைதல் என்பதாகும்.

  இந்த ஆண்டு , மாநில அளவிலான சர்வதேச முதியோர் தினவிழா 28.02.2017 அன்று சர்.பிட்டி.தியாகராய அரங்கம்,  தி.நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்விழாவில் மாண்புமிகு சமூகநலத்துறை அமைச்சர் டாக்டர்.வி.சரோஜா , முதன்மைச் செயலர் சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை டாக்டர்.க.மணிவாசன் ,இ.ஆ.ப., இயக்குநர், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை திருமதி.வே.அமுதவல்லி,இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர் திருமதி.ப.மகேஸ்வரி, இ.ஆ.ப., முதியோர் நல மருத்துவர் டாக்டர்.வ.செ.நடராஜன், ஹெல்ப் ஏஜ் இந்தியா துணை இயக்குநர் திரு.எட்வின் பாபு, தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.சத்தியநாராயணன் மற்றும் அலுவலர்கள் , பொதுமக்கள், மூத்த குடிமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

     மேற்காண் விழாவில் """" எனக்கு 64 வயதாகும்போது """" என்ற கட்டுரை போட்டியில் வென்ற மதுரை இலக்குமி பள்ளி திரு.வெங்கட அருண்குமார், கரூர் டிஎன்பிஎல் பள்ளியை சார்ந்த திரு.மனோஜ், சென்னை டவுட்டன் பள்ளியை சார்ந்த செல்வி. சிவகாமி ஆகியோருக்கு பாராட்டுச்சான்றும், பரிசும் வழங்கப்பட்டது.

அதே போன்று முதியோர் நலனுக்காக தொண்டாற்றும் நிறுவனங்களான ஹெல்ப் ஏஜ்  இந்தியா – தமிழ்நாடு, லிட்டில் டிராப்ஸ்- காஞ்சிபுரம், ஜீவஜோதி அறக்கட்டளை – திருவள்ளூர் , ராமகிருஷ்ண-சாரதா ஆஸ்ரமம், உளுந்துhர்பேட்டை – விழுப்புரம் ஆகியோரை பாராட்டி பாராட்டு சான்றிதழும் கேடயமும் வழங்கப்பட்டது.

    90 வயதினை கடந்த 26 முதியோர்கள் மலர்கிரீடம் வைத்து பொன்னாடை போர்த்தி சுகாதார பெட்டி அளித்து கௌரவிக்கப்பட்டனர்.

     திருநங்கையின் பரத நாட்டியம், அரசு குழந்தைகள் காப்பக  குழந்தைகளின் நடனம், அரசு சேவையில்ல மாணவியரின் நடனம் (ம) முதியோர் இல்லத்தில் உள்ளுரையும் முதியோர்களின் இரண்டு நடனம், நாடகம் ஆகிய கலை நிகழ்ச்சியில் நடத்தப்பெற்றது. ண்காட்சியாக விளக்கப்பட்டது. மாநகராட்சி மூலம் மருத்துவ முகாம், 108/104 மருத்துவ சேவைகள் போன்றவை விளக்கப்பட்டது. அனைவருக்கும் முதியோர் நல மருத்துவர் டாக்டர்.வ.செ.நடராஜன் எழுதிய """" முதுமையை முறியடிப்போம் """" 60 வயதிற்கு மேலும் ஆரோக்கியமாக வாழ வழிமுறைகள் """" மற்றும் பெற்றோர் (ம) முதியோர் பராமரிப்புச்சட்டம் - 2007ன் சாராம்சங்கள் அடங்கிய கையேடுகள் வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சிற்கான ஏற்பாடுகளை மாவட்ட சமூகநல அலுவலர், சென்னை, அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

alt